2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் வென்ற முதலாவது இந்தியப் பெண்ணாக சிந்து

Shanmugan Murugavel   / 2021 ஓகஸ்ட் 02 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு பதக்கங்களை வென்ற முதலாவது இந்தியப் பெண்ணாக பி.வி. சிந்து மாறியுள்ளார்.

டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளின் பெண்களுக்கான தனிநபர் பூப்பந்தாட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றதையடுத்தே இவ்வாறு சிந்து மாறியுள்ளார்.

வெண்கலப் போட்டிக்கான போட்டியில் சீனாவின் ஹீ பிங்ஜியாவோவை 21-13, 21-15 என்ற செட் கணக்கில் சிந்து வென்றிருந்தார்.

முன்னர் கடந்த றியோ 2016 ஒலிம்பிக் போட்டிகளில் இதே போட்டியில் சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குர்ஜிட் கெளர் பெற்ற கோலுடன் அவுஸ்திரேலிய பெண்கள் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் ஹொக்கி காலிறுதிப் போட்டியில் வென்ற இந்தியா, முதன்முறையாக அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

இதேவேளை, ஆண்களுக்கான தனிநபர் டென்னிஸ் இறுதிப் போட்டியில், ரஷ்ய ஒலிம்பிக் செயற்குழுவின் கரென் காஞ்சனோவ்வை 6-1, 6-3 என்ற நேர் செட்களில் வென்ற ஜேர்மனியின் அலெக்ஸான்டர் ஸவ்ரேவ் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X