2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஒலிம்பிக்கில் அதிக தங்கங்களை வென்றவராக லெடக்கி

Shanmugan Murugavel   / 2024 ஓகஸ்ட் 01 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்களுக்கான நீச்சலில் ஒலிம்பிக்கில் அதிக தங்கப் பதக்கங்களை வென்றவராக ஐக்கிய அமெரிக்காவின் கேட்டி லெடக்கி மாறியுள்ளார்.

பிரான்ஸில் நடைபெற்று வரும் பரிஸ் 2024 ஒலிம்பிக்கின் வியாழக்கிழமை (01) நடைபெற்ற பெண்களுக்கான 1,500 மீற்றர் பிறீஸ்டைல் நீச்சலில் தங்கப் பதக்கத்தை வென்றதன் மூலமே சக ஐக்கிய அமெரிக்காவின் ஜெனி தொம்ஸனின் 1992 தொடக்கம் 2000ஆம் ஆண்டு வரையான மூன்று ஒலிம்பிக்குகளின் அஞ்சலில் எட்டுத் தங்கப் பதக்கங்களை வென்றதை 27 வயதான லெடக்கி சமப்படுத்தியுள்ளார்.

பதக்கப் பட்டியலில் 9 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களுடன் முதலாமிடத்தில் சீனா காணப்படுகின்றது. 8 தங்கம், 10 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாமிடத்தில் பிரான்ஸும் 8 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களுடன் மூன்றாமிடத்தில் ஜப்பானும், 7 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களுடன் நான்காமிடத்தில் அவுஸ்திரேலியாவும் காணப்படுகின்றன. 6 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களுடன் ஐந்தாமிடத்தில் பெரிய பிரித்தானியா காணப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .