2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஒலிம்பிக்குக்காக விரலைத் துண்டித்த வீரர்

Shanmugan Murugavel   / 2024 ஜூலை 28 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் பொருட்டு அவுஸ்திரேலியாவின் ஹொக்கி வீரரான மற் டோஸன் விரலின் பகுதியொன்றை துண்டித்துள்ளார்.

பயிற்சியின்போது 30 வயதான டோஸனின் வலது கை விரலொன்றானது இரண்டு வாரங்களுக்கு முன்னர் மோசமாக முறிவடைந்துள்ளது. சத்திரசிகிச்சை மூலம் இதை சரி செய்வதற்கு மாதக் கணக்காகும்.

இந்நிலையிலேயே விரலின் மடிக்கப்படும் பகுதி வரை தனது மூன்றாவது ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் பொருட்டு அகற்றத் தீர்மானித்துள்ளார்.

அந்தவகையில் சனிக்கிழமை (27) நடைபெற்ற ஆர்ஜென்டீனாவுக்கெதிரான குழு பி ஆரம்பப் போட்டியில் காயமடைந்த 16 நாள்களில் டோஸன் பங்கேற்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .