2025 ஜூலை 02, புதன்கிழமை

ஒலிம்பிக்கை நோக்கி விநியோகநபராக மாறிய நீளம்பாய்தல் வீரர்

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 17 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நிதிச் சேகரிப்பொன்றினூடாக ஆயிரக்கணக்கான பிரித்தானிய ஸ்டேர்லிங் பவுண்ஸ்களை சேகரித்ததனூடாக ஒலிம்பிக்கில் போட்டியிடும் கனவை பிரித்தானிய நீளம்பாய்தல் வீரரொருவர் புதுப்பித்துள்ளார்.

தனது நிதியளிப்பை இழந்தமை, கொவிட்-19 காரணமாக பிரித்தானியத் தலைநகர் இலண்டனிலுள்ள உள்ளூர் பயிற்சி மய்யங்கள் மூடப்பட்ட நிலையில், விநியோக ஓட்டுநரொருவராக பணியொன்றை குறித்த நீளம்பாய்தல் வீரரான டான் பிறம்பிள் எடுத்திருந்தார்.

இந்நிலையில், 12,000க்கும் அதிகமான பிரித்தானிய ஸ்டேர்லிங் பவுண்ஸ்கள் நிதியளிக்கப்பட்டதையடுத்து முழு நேர பயிற்சிக்கு டான் பிறம்பிள் திரும்பியுள்ளார்.

குறித்த நிதியில் ஏறத்தாழ 9,000 பிரித்தானிய ஸ்டேர்லிங் பவுண்ஸ்கள் தனியொரு நிதியளிப்பாளரான உடற்கூற்று நிறுவனமான ஜிம்ஷார்க்கிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .