2026 ஜனவரி 09, வெள்ளிக்கிழமை

‘ஓய்வு குறித்து நெய்மர் கருத்தில் கொண்டார்’

Shanmugan Murugavel   / 2026 ஜனவரி 06 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறுதியாக தனக்கு ஏற்பட்ட காயத்தையடுத்து கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெறுவது குறித்து கருத்திற் கொண்டதாக அவரது தந்தையும் முகவருமான நெய்மர் டா சில்வா சன்டோஸ் சீனியர் தெரிவித்தார்.

முழங்கால் காயத்தால் 33 வயதான நெய்மர் பாதிக்கப்பட்டபோதும் பிரேஸிலின் உள்ளூர்க் கழகமான சன்டோஸுக்காக விளையாடி பின்னரே சத்திரசிகிச்சைக்குள்ளாகியிருந்தார்.

தாங்கள் நெய்மருடன் கதைக்க முன்னர் அவரின் காயத்தை ஊடகங்கள் வெளிப்படுத்தியதாகவும், தான் நெய்மரிடம் சென்றபோது “என்னால் இன்னும் முடியவில்லை. சத்திர சிகிச்சை செய்வது சிறந்ததா என்றும் எனக்குத் தெரியவில்லை. என்னைப் பொறுத்த வரையில் எனக்குப் போதும்” என்று அவர் தெரிவித்ததாக நெய்மர் சீனியர் கூறியுள்ளார்.

விமர்சகர்களுக்கு பதிலளிக்க மீண்டும் விளையாடுமாறும், உலகக் கிண்ண இலக்கை பூர்த்தி செய்யுமாறும் நெய்மரிடம்  தான் கூறியதாக நெய்மர் சீனியர் தெரிவித்துள்ளார்.

பிரேஸிலிய சீரி ஏ பருவகாலமானது இம்மாத இறுதியில் ஆரம்பிப்பதற்கு முன்னர் நெய்மர் குணமடைந்து விடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .