2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஓய்வு பெறுகிறார் கெளதம் கம்பீர்

Editorial   / 2018 டிசெம்பர் 05 , பி.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அணியின் முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கெளதம் கம்பீர், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளார். 1999-2000ஆம் ஆண்டு பருவகாலத்தில் விளையாட ஆரம்பித்த கம்பீர் ஏறத்தாழ 20 ஆண்டுகளின் பின்னர், தனது சொந்த மைதானமான டெல்லி பெரோஸ் ஷா கொட்லா மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ள ஆந்திர அணிக்கெதிரான டெல்லியின் ரஞ்சிக் கிண்ணப் போட்டியுடன் ஓய்வுபெறுகின்றார். 37 வயதான கம்பீர், தனது ஓய்வை சமூக வலைத்தளமொன்றில் காணொளி மூலமாகவே அறிவித்திருந்தார்.

இந்திய அணியின் 2003ஆம் ஆண்டு அறிமுகத்தை மேற்கொண்ட கம்பீர் இறுதியாக 2016ஆம் ஆண்டு விளையாடியிருந்தார். மொத்தமாக 58 டெஸ்ட்களில் விளையாடிய கம்பீர், 41.95 என்ற சராசரியில் 4,154 ஓட்டங்களைப் பெற்றதுடன், 147 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 39.68 என்ற சராசரியில் 5,238 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இதுதவிர, 37 இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய கம்பீர், 27.41 என்ற சராசரியில், 100 பந்துகளுக்கு 119.2 என்ற ஓட்டங்கள் என்ற வேகத்தில் 932 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இந்நிலையில், 2007ஆம் ஆண்டு உலக இருபதுக்கு – 20 இறுதிப் போட்டியில் சம்பியனாகிய அணியிலும் 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்திலும் சம்பியனாகிய அணியிலும் இடம்பெற்றிருந்த கம்பீர், இரண்டு முறையும் இறுதிப் போட்டிகளில் தமதணி சார்பாக அதிக ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இதேவேளை, இந்திய அணிக்கு ஆறு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தலைமை தாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .