2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஓய்வு பெறுமாறு டோனிக்கு நெருக்கடி?

Editorial   / 2019 ஜூலை 15 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரான  மகேந்திரசிங் டோனி ஓய்வு பெறாவிட்டால் அவரை அணியில் சேர்க்காமல் புறக்கணிப்பது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை திட்ட மிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவுக்கு 2 உலகக் கிண்ணங்களை (2007-20 ஓவர் கிண்ணம், 2011 ஒருநாள் போட்டி) பெற்றுக்கொடுத்த  தற்போது ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவரில் விளையாடி வருகிறார்.

38 வயதான டோனி உலக கிண்ண போட்டியோடு ஓய்வு பெறுவார் என்று அனைவராலும் எதிர் பார்க்கப்பட்டது. உலகக் கிண்ண போட்டியில் அவரது ஆட்டம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் டோனி ஓய்வு குறித்து தன்னிடம் எதுவும் பேசவில்லை என்று அணித்தலைவர் விராட்கோலி தெரிவித்தையடுத்து, டோனி தனது ஓய்வு முடிவை தள்ளி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த வருடம் நடைபெறும் 20 ஓவர் உலக கிண்ணம் வரை விளையாட டோனி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில், டோனி ஓய்வு பெறாவிட்டால் அவரை அணியில் சேர்க்காமல் புறக்கணிப்பது என்று பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .