Shanmugan Murugavel / 2020 நவம்பர் 16 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவின் முன்னாள் மத்தியகளவீரரான ஸ்கேவியர் மஷரானோ, கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வுபெற்றுள்ளார்.
இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் உள்ளிட்ட கழகங்களுக்காக விளையாடியிருந்த மஷரானோ, இறுதியாக ஆர்ஜென்டீனாக் கழகமான எஸ்டியன்டேஸ் டீ லா பிளாட்டாவுக்காக விளையாடியிருந்தார்.
இதேவேளை, ஆர்ஜென்டீனா சர்வதேச அணியினதும் மத்தியகளவீரரான மஷரானோ அவ்வணிக்காக 147 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
தவிர, ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக்கை இரண்டு தடவைகள் பார்சிலோனாவுடன் வென்ற மஷரானோ, ஐந்து தடவைகள் லா லிகா சம்பியனாகவுமிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .