2025 ஜூலை 02, புதன்கிழமை

ஓய்வுபெற்ற உமர் குல்

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 17 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளரான உமர் குல், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தனது ஓயவை அறிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான தேசிய இருபதுக்கு – 20 கிண்ணத் தொடரில், தென் பஞ்சாப்புக்கெதிராக தனது அணியான பலூசிஸ்தான்  நேற்று வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்தே அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தனது ஓய்வை 36 வயதான உமர் குல் அறிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்காக 2003ஆம் ஆண்டு அறிமுகத்தை மேற்கொண்ட உமர் குல், 2016ஆம் ஆண்டு வரையில் விளையாடி 47 டெஸ்ட் போட்டிகளில் 163 விக்கெட்டுகளையும், 130 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 179 விக்கெட்டுகளையும், 60 இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் 85 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

உலக இருபதுக்கு – 20 ஐ பாகிஸ்தான் கைப்பற்றும்போது அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவராக இருந்ததுடன், இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலிடத்தில் இருந்ததுடன், யோர்க்கர்களை சிறப்பாக வீசுபவராகவும் காணப்பட்டிருந்தார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .