2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

ஓராண்டு நீடிப்புக்கு இணங்கிய குவார்டியோலா

Shanmugan Murugavel   / 2024 நவம்பர் 21 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் முகாமையாளரான பெப் குவார்டியோலா, ஓராண்டு ஒப்பந்த நீடிப்புக்கு இணங்கியுள்ளார்.

இத்தகவல் குறித்து கருத்துத் தெரிவிக்க சிற்றி மறுத்துள்ளபோதும் சிற்றியுடன் 2016ஆம் ஆண்டு இணைந்த குவார்டியோலா புதிய ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட இணங்கியுள்தாக பல்வேறு தகவல்மூலங்கள் குறிப்பிட்டுள்ளன.

குவார்டியோலாவின் சிற்றியுடனான ஒப்பந்தமானது நடப்புப் பருவகால முடிவில் இரத்தாவதாகக் காணப்பட்டிருந்தது.

சிற்றியுடன் 18 பட்டங்களை குவார்டியோலா வென்றுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .