2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

ஓவல் மைதான பணியாளருடன் கம்பீர் முரண்பாடு

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 30 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தின் ஓவல் மைதான பணியாளருடன் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கெளதம் கம்பீருக்கு முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

ஓவல் ஆடுகளத்தை பயிற்சியாளர்கள் பரிசோதிக்கும்போது அங்கிருந்து நகருமாரு தங்களுக்கு கூறப்பட்டதாக இந்திய அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளர் சிதன்ஷு கொடக் தெரிவித்துள்ளார்.

ஓவல் மைதான தலைமைப் பணியாளர் லீ போர்ட்டிஸை நோக்கி கம்பீர் தனது விரலை நோக்கி காட்டியதுடன், நீ மைதானப் பணியாளர் மாத்திரமே; நாங்கள் என்ன செய்வதென்று நீ கூறமுடியாதெனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் தன்னை நோக்கி தொடர்ந்து முறைத்தால் சர்வதேச கிரிக்கெட் சபையின் போட்டி மத்தியஸ்தரிடம் முறையிடுவேன் என கம்பீரிடம் போர்டிஸ் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .