2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

கூடைப்பந்தாட்டத்தில் அமெரிக்காவுக்குத் தங்கம்

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 21 , பி.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டிகளில், ஸ்பெய்னை எதிர்கொண்ட அமெரிக்க அணி, இலகுவான வெற்றியொன்றைப் பெற்று, தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது.
பிரான்ஸைத் தோற்கடித்து அமெரிக்காவும் சேர்பியாவைத் தோற்கடித்து ஸ்பெய்னும், இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தன.

இறுதிப் போட்டியில் முதலாவது காற்பகுதியில், ஓரளவு போட்டித்தன்மை நிலவிய போதிலும், அக்காற்பகுதியை, 21-17 என்ற புள்ளிகள் கணக்கில், அமெரிக்கா வென்றது. இரண்டாவது காற்பகுதியில், தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்திய அமெரிக்க அணி, 28 புள்ளிகளைக் குவிக்க, ஸ்பெய்ன் அணியால் 15 புள்ளிகளையே பெற முடிந்தது. இதனால், பாதி நேரத்தின் முடிவில், 49-32 என்ற புள்ளிகள் கணக்கில், அமெரிக்க அணி முன்னிலை வகித்தது.

மூன்றாவது காற்பகுதியில், 32 புள்ளிகளை அமெரிக்கா குவிக்க, 17 புள்ளிகளை மாத்திரமே ஸ்பெய்ன் பெற்றது. இறுதிக் காற்பகுதியில், அமெரிக்க அணி 20 புள்ளிகளைப் பெற, ஸ்பெய்ன் அணி 23 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டது. எனினும், இறுதியில் 101-72 என்ற புள்ளிகள் கணக்கில் அமெரிக்க அணி வெற்றிபெற்று, தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .