Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 08 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து பிறீமியர் லீக் சம்பியன்களுக்கும் எஃப்.ஏ சம்பியன்களுக்குமிடையே இடம்பெறும் கொமியுனிட்டி ஷீல்ட் போட்டியில், புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட ஸல்டான் இப்ராஹிமோவிக்கினால் பெறப்பட்ட கோலின் மூலம் மன்செஸ்டர் யுனைட்டெட் அணி வெற்றி பெற்றது.
40யார் தூரத்தை ஓடி, நான்கு வீரர்களைக் கடந்து போட்டியின் 32ஆவது நிமிடத்தில் அபராமாக கோலொன்றினைப் பெற்ற யுனைட்டெட்டின் ஜெஸி லிங்கார்ட் தனது அணிக்கு முன்னிலையை வழங்கியபோதும், மரௌனே ஃபெலைனியின் பின்புறமான பந்துப்பரிமாற்றமொன்றை பெற்ற லெய்செஸ்டரின் ஜேமி வார்டி போட்டியின் 52ஆவது நிமிடத்தில் கோலொன்றினைப் பெற்று கோல் எண்ணிக்கையை சமப்படுத்தினார்.
எனினும் போட்டியின் 83ஆவது நிமிடத்தில் அந்தோனியோ வலன்சியாவிடமிருந்து பெற்ற பந்தை இப்ராஹிமோவிக் கோலாக்க, 2-1 என்ற கோல்கணக்கில் லெய்செஸ்டரை யுனைட்டெட் தோற்கடித்தது.
10 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
21 minute ago