Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூலை 29 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜார்ஜியாவில் திங்கட்கிழமை (28) நடந்த உலக கோப்பை செஸ் இறுதி போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த கேனெரு ஹம்பி மற்றும் திவ்யா தேஷ்முக் ஆகியோர் மோதினர். இதில் 19 வயது நிரம்பிய திவ்யா தேஷ்முக் வென்று செஸ் உலககோப்பையை வென்றார். இந்நிலையில் தான் அவர் தனது வாழைப்பழ சென்டிமென்ட்டை பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ள சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.
ஜார்ஜியாவில் மகளிருக்கான உலக கோப்பை செஸ் தொடர் கடந்த 4ம் திகதி தொடங்கியது. இதில் 46 நாடுகளை சேரந்த 107 வீராங்கனைகள் பங்கேற்றனர். இதன் இறுதிப்போட்டிக்கு இந்திய வீராங்கனைகள் கோனெரு ஹம்பி- திவ்யா தேஷ்முக் ஆகியோர் தகுதி பெற்றனர்.
கிளாசிக்கல் அடிப்படையில் நடந்த முதல் ஆட்டம் டிரா ஆனது. இதனால் கிளாசிக் முறையிலான 2வது ஆட்டம் நடந்தது. இந்த போட்டியும் டிராவானது. இருவரும் சமநிலைவகித்தனர்.
சாம்பியனை தீர்மானிக்க டைபிரேக்கர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இநு்த போட்டியில் கோனெரு ஹம்பியை வீழ்த்தி திவ்யா தேஷ்முக் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். இதன்மூலம் மகளிர் செஸ் உலகக் கோப்பையை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை திவ்யா படைத்துள்ளார். திவ்யாவை எதிர்த்து விளையாடிய கோனெரு ஹம்பி, 2-ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
இந்நிலையில் தான் இந்த போட்டியில் திவ்யா தேஷ்முக் வாழைப்பழ சென்டிமென்ட்டை கடைப்பிடித்து உள்ளார். திவ்யா தேஷ்முக்கை பொறுத்தவரை செஸ் போட்டியின்போது தனது அருகே வாழைப்பழத்தை வைத்து கொள்வார். அந்த வாழைப்பழத்தை அவர் சாப்பிடாமல் இருப்பார்.
இப்படி தொடப்படாத வாழைப்பழம் பலமுறை அவருக்கு அதிர்ஷ்டத்தை தந்துள்ளது. அந்த வகையில் நேற்றைய டைபிரேக்கர் போட்டியிலும் அவர் கொண்டு சென்ற வாழைப்பழத்தை சாப்பிடாமல் அப்படியே வைத்திருந்த நிலையில் மகளிர் உலககோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியனாகி உள்ளார்.
கிளாசிக்கல்லில் 2வது ஆட்டம் டிராவில் முடிவடைந்த பிறகு இதுபற்றி திவ்யா தேஷ்முக்கிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‛‛வாழைப்பழத்தை வைத்து நான் என்ன செய்யப்போகிறேன். அதை இனி சாப்பிடப்போகிறேன். போட்டியில் என்னை எதிர்த்து ஆடுபவர் வாழைப்பழத்தை சாப்பிட விடுவது இல்லை. அதேவேளையில் நான் போட்டியின் நடுவே வாழைப்பழம் சாப்பிட்டால் மிகவும் நிதானமாக இருக்கிறேன் என்று அர்த்தம்.'' என்று கூறினார். இதையடுத்து வாழைப்பழம் அதிர்ஷ்டமாக நினைக்கிறீர்களா? என்று கேட்டதால், ‛‛இல்லை'' என்று சிரித்தபடி கூறினார்.
இருப்பினும் போட்டியின்போது தொடப்படாத வாழைப்பழம் என்பது அவருக்கு அதிர்ஷ்டமாக இருப்பதாக கூறப்படுகிறது. திவ்யா தேஷ்முக் மட்டுமின்றி பல வீரர், வீராங்கனைகள் தங்களுக்கு என்று ஒரு சென்டிமென்ட்டை கடைப்பிடித்து வருகின்றனர். உதாரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி முக்கியமான போட்டிகளில் தனது ராசியான கையுறையை அணிவதை வழக்கமாக வைத்திருந்தார். அதேபோல் ஓய்வு பெற்ற டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் தனது தண்ணீர் பாட்டிலை சென்டிமென்ட்டாக பயன்படுத்தி வந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .