2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

குழாமிலிருந்து நீக்கப்பட்டதை இறுதியிலேயே அறிந்த கில்

Shanmugan Murugavel   / 2025 டிசெம்பர் 21 , பி.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடருக்கான இந்தியக் குழாமிலிருந்து நீக்கப்பட்டதை, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னரே ஷுப்மன் கில் அறிந்து கொண்டுள்ளார்.

உலகக் கிண்ணக் குழாமிலும் அதற்கு முன்பான நியூசிலாந்துத் தொடருக்கான குழாம் சனிக்கிழமை (20) பிற்பகல் அறிவிக்கப்பட்ட நிலையில் குழாமிலிருந்து நீக்கப்பட்டதையறிந்து கில் அதிர்ச்சியடைந்துள்ளார்.

தென்னாபிரிக்காவுக்கெதிரான ஐந்தாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டி நடைபெற்ற அஹமதாபாத்திலிருந்து தனது வீட்டுக்கு சண்டிஹாருக்குச் செல்லும்போதே இச்செய்தி கில்லுக்கு கிடைத்துள்ளது.

மனதளவில் உலகக் கிண்ணம், நியூசிலாந்துத் தொடருக்கு மனதளவில் கில் தயாரானதாகவும், குறித்த தென்னாபிரிக்காவுக்கெதிரான ஐந்தாவது போட்டியில் விளையாடத் தயாரானதாகவும் கூறப்படுகிறது. எனினும் காயம் உலகக் கிண்ணத்துக்கு முன்னர் தீவிரமாகிவிடுமென்பதாலேயே விளையாடவில்லை.

அபிஷேக் ஷர்மாவுடன் அப்போட்டியில் சஞ்சு சாம்சன் ஆரம்பத் துடுப்பாட்டவீரராகக் களமிறங்கியதுடன், மூன்றாவது ஆரம்பத் துடுப்பாட்டவீரராக குழாமில் இஷன் கிஷன் இடம்பெற்றுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X