2026 ஜனவரி 09, வெள்ளிக்கிழமை

கவாஜாவின் எதிர்காலம் குறித்து பேச்சுக்களில்லை

Shanmugan Murugavel   / 2025 டிசெம்பர் 29 , பி.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜாவின் எதிர்காலம் குறித்து எவ்விதக் கலந்துரையாடல்களைக் கொண்டிருக்கவில்லையென அவ்வணியின் பயிற்சியாளர் அன்றூ மக்டொனால்ட் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கெதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து மீண்டும் எதிர்வரும் ஓகஸ்டிலேயே அவுஸ்திரேலியா டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடவுள்ள நிலையில், இந்த ஐந்தாவது ஆஷஸ் போட்டியே 39 வயதான கவாஜாவின் இறுதிப் போட்டியாக இருக்குமென்று கூறப்படுகின்ற நிலையிலேயே மக்டொனால்டின் குறித்த கருத்துகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நடப்பாண்டில் கவாஜாவின் பெறுபேறுகள் காரணமாக சிட்னியில் நடைபெறவுள்ள ஐந்தாவது போட்டியில் விளையாடுவாரென மக்டொனால்ட் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .