2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

‘காயமடைமவர்களுக்கு பதில் வீரர்கள்’

Shanmugan Murugavel   / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், செஞ்சூரியனில் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்த முதலாவது டெஸ்டில் இலங்கையணியின் ஆறு வீரர்கள் காயமடைந்திருந்தனர் அல்லது உபாதைக்குள்ளாகியிருந்தனர்.

அந்தவகையில், காயமடைந்த வீரர்களுக்குப் பதிலாக வீரர்களைக் களமிறக்குவது தொடர்பான பிரச்சினையை சர்வதேச கிரிக்கெட் சபையுடன் ஆராய்வதில் இலங்கையணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கவனமாகவுள்ளார்.

தனஞ்சய டி சில்வா, கசுன் ராஜிதவைத் தொடர்ந்து நேற்று முன்தினம் லஹிரு குமாரவையும் அடிவயிற்றுப் பகுதிக் காயம் காரணமாக இலங்கை இழந்தது.

இதேவேளை, பந்தின் மேல் காலை மிதித்திருந்த வனிடு ஹஸரங்க களத்துக்கு வெளியே சென்று பின்னர் மீண்டிருந்தார்.

இதைவிட நிரோஷன் டிக்வெல்லவும் தென்னாபிரிக்காவின் இனிங்ஸின்போது சிகிச்சையைப் பெற்றதுடன், நாள் முடிவில் தினேஷ் சந்திமாலும் சிகிச்சைப் பெற்றுக் கொணிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .