2026 ஜனவரி 09, வெள்ளிக்கிழமை

கார்ல்சனை வென்று முன்னிலையில் எரிகைசி

Shanmugan Murugavel   / 2025 டிசெம்பர் 30 , பி.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக பிளிட்ஸ் சதுரங்க சம்பியன்ஷிப்பின் முதல் நாள் முடிவில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி முன்னிலையில் காணப்படுகின்றார்.

எப்போட்டியிலும் தோற்காமல் பெறக்கூடிய 13 புள்ளிகளில் 10 புள்ளிகளைப் பெற்று பிரான்ஸின் மக்ஸிமெ வஷியர்-லக்ரேவ், ஐக்கிய அமெரிக்காவின் பேபியானோ கருனானாவுடன் முன்னிலையைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நோர்வேயின் மக்னுஸ் கார்ல்சனின் தவறொன்றைப் பயன்படுத்தி அவரை எரிகைசி வென்ற நிலையில், பெறக்கூடிய 10 புள்ளிகளில் 9 புள்ளிகளைப் பெற்று 11ஆம் இடத்தில் முதல்நிலை வீரரான கார்ல்சன் காணப்படுகின்றார். இதே புள்ளிகளுடன் இந்தியாவின் பிரக்யானந்தா 15ஆம் இடத்திலும், பெறக்கூடிய 10 புள்ளிகளில் 8.5 புள்ளிகளுடன் உலக சம்பியன் டொம்மராஜு குகேஷ் 27ஆம் இடத்திலும் காணப்படுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .