2025 மே 16, வெள்ளிக்கிழமை

கிரிக்கெட் பிரேரணை : நாளை விவாதம்

Editorial   / 2023 நவம்பர் 08 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிகெட் சபையை உடனடியாக கலைத்து, கிரிக்கெட் சபையின் நடவடிக்கைகளை இடைக்கால குழு முன்னெடுத்துச்செல்லும் எதிர்க்கட்சியின் பிரேரணை தொடர்பில்   நாளை (09) வியாழக்கிழமை சபையில் விவாதம் நடத்தப்படவுள்ளது  

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷான்  ரணசிங்க இலங்கை கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடிகள் தொடர்பில்  நீண்ட விளக்கம் ஒன்றை முன்வைத்ததைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடிகளை இல்லாமலாக்குவதற்கு இலங்கை கிரிக்கெட் சபையை உடனடியாக கலைக்க வேண்டும் என தெரிவித்து முழு பாராளுமன்றமும் இணைந்து பாராளுமன்றத்தில் பிரேரணை நிறைவேற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரேரணை ஒன்றை முன்வைத்தார்.

குறித்த பிரேரணைக்கு எதிர்க்கட்சிகள் அனைவரும் ஆதரவு தெரிவித்த நிலையில்  அரச தரப்பும்  அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், அது தொடர்பில் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளவோம் என சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சபை நடவடிக்கையை சுமார் ஒரு மணி நேரம் வரை இடை நிறுத்தப்பட்டு  கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது.

அதில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி     நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி, நாளை (09) வியாழக்கிழமை இலங்கை கிரிக்கெட் சபை தொடர்பாக விவாதித்து, இலங்கை கிரிகெட் சபையை உடனடியாக கலைத்துவிடவும் இடைக்கால குழு கிரிக்கெட் சபையின் நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்லவும் பிரேரணை நிறைவேற்றி வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .