2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

குகையில் 500 நாட்கள் தனியாக வாழ்ந்த வீராங்கனை

Editorial   / 2023 ஏப்ரல் 16 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆய்வு ஒன்றுக்காக வெளி உலக தொடர்பின்றி 500 நாட்கள் குகைக்குள் வாழ்ந்த தடகள வீராங்கனை பியாட்ரிஸ் பிளாமினி வெளியே வந்துள்ளார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 ஐரோப்பிய நாடான ஸ்பெயினைச் சேர்ந்தவர் பியாட்ரிஸ் பிளாமினி, மலையேற்றம் மற்றும் தடகள வீராங்கனையான இவருக்கு வயது 50. ஆய்வு ஒன்றுக்காக பியாட்ரிஸ் ஸ்பெயினில் உள்ள கிரானாடா மலைப் பகுதியில், பூமிக்கடியில் சுமார் 230 அடி ஆழத்தில் அமைந்துள்ள குகைக்குள் செல்ல திட்டமிட்டார். அதன்படி, கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் திகதி குகைக்குள் சென்றுவிட்டார்.

2 கெமராக்கள், ஆயிரம் லீட்டர் தண்ணீர், 60 புத்தகங்களுடன் குகைக்குள் சென்ற பியாட்ரஸூக்கு துணை அவர் மட்டும்தான். வெளி உலகத்துடன் தொடர்பே கிடையாது. உக்ரைன் போர், விலைவாசி உயர்வு, ராணி எலிசபெத் மறைவு உள்ளிட்ட பல உலக நிகழ்வுகளை அவர் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை.

குகைக்குள் தனது அனுபவங்களை பதிவு செய்ததுடன், கம்பளி பின்னுதல், ஓவியம் வரைதல், புத்தகம் படித்தல் மற்றும் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி இது மட்டும்தான் அவரது அன்றாட பணியாக இருந்திருக்கிறது.

யாருடைய துணையும் இல்லாமல் குகைக்குள் வசித்த இவரை வெளி உலகத்தில் இருந்து தொடர்பு கொள்ள முடியாவிட்டாலும் இவரின் ஒவ்வொரு அசைவையும், உளவியலாளர்களும் ஆராய்ச்சியாளர்களும் உற்று கவனித்து வந்தனர்.

பிளாமினியின் அனுபவத்தை உளவியலாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். தனிமைப்படுத்துதலின் தாக்கம், நேரத்தை பற்றிய புரிதல், தூக்கத்தில் ஏற்படும் மாற்றம், பூமிக்கடியில் வாழும்போது மனிதர்களுக்கு ஏற்படும் நரம்பியல் அறிவாற்றல் மாற்றங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X