Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2022 ஜனவரி 21 , பி.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கணேஸ் இந்துகாதேவிக்கு வவுனியாவிலும் மாங்குளத்தில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
18-01-2022 அன்று பாகிஸ்தான் லாகூரில் இடம்பெற்ற பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையில் நடைபெற்ற 2 ஆவது சவேட் குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று 25 வயதுக்கு உட்பட்ட 50/55 கிலோகிராம் எடைப்பிரிவின் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் நாட்டுக்கும் பெருமை தேடித் தந்துள்ளார் கணேஸ் இந்துகாதேவிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்
தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்து குத்துச்சண்டையில் சாதித்து கணேஷ் இந்துகாதேவியுடன் குறித்த போட்டியில் இலங்கை அணி 7 தங்கம் மற்றும் 5 வெள்ளிப்பதக்கங்களை வெற்றிக்கொண்டு சம்பியனாக மகுடம் சூடியது.
இவ்வாறான நிலையில் குறித்த இலங்கை அணி நேற்று(20) மாலை இலங்கையை வந்தடைந்திருந்தது இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் நாட்டுக்கும் பெருமை தேடித் தந்துள்ள கணேஸ் இந்துகாதேவி இன்று (21) காலை மாங்குளம் கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் உள்ள தனது வீடு திரும்பும் வழியில் அவருக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் குறித்த யுவதிக்கு பாகிஸ்தான் போட்டியில் கலந்துகொள்ள 10 இலட்சத்து 5,000 ரூபாய் நிதியினை ஏற்பாடு செய்து வழங்கிய தமிழ் விருட்ஷம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமாரின் ஏற்பாட்டில் இன்றுக் காலை வவுனியாவில் வரவேற்பளிக்கப்பட்டு வவுனியா கந்தசாமி கோயிலில் வழிபாட்டிலும் கலந்துகொண்டுள்ளார்
இதனை தொடந்து மாங்குளம் நகருக்கு வருகை தந்த யுவதிக்கு மாங்குளம் மின்னொளி விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் பாரிய வரவேற்பு பதாகை ஒன்று வைக்கப்பட்டு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
2 hours ago
2 hours ago