Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 22 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்காவின் நீண்ட கால டெஸ்ட் அணித்தலைவராக இருக்க மாட்டேன் என குயின்டன் டி கொக் உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும், நிரந்தர அணித்தலைவர் நியமிக்கப்படும் வரையில் தென்னாபிரிக்காவை வழிநடத்துவதற்கு தயாராக இருப்பதாக டி கொக் தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்காவின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான அணித்தலைவரான டி கொக்கை, இப்பருவகாலத்தில் டெஸ்ட்களுக்கு தலைமை தாங்குமாறு வினவப்படிருந்ந்தார்.
விக்கெட் காப்பாளர், சிரேஷ்ட துடுப்பாட்டவீரரான டி கொக்குக்கு மேலும் சுமையை ஏற்ற விரும்பவில்லை என தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் பணிப்பாளர் கிரேமி ஸ்மித் இவ்வாறு தெரிவித்த பின்னரே மேற்குறித்தவாறு வினவப்பட்டிருந்தது.
இந்நிலையில், தேர்வாளர்கள் இன்னொருவரை அணித்தலைவராக தெரிவுசெய்வார்கள் என்ற உறுதிமொழியிலேயே அணித்தலைமைப் பொறுப்பை ஏற்றதாகவும், அணித்தலைமையை தான் ஏற்றுக் கொள்வது தன்னியக்கமல்ல என டி கொக் கூறியுள்ளார்.
இதேவேளை, இலங்கைத் தொடருக்கான தென்னாபிரிக்க டெஸ்ட் குழாமில் கைல் வெரைன் உள்ளபோதும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்தும் விக்கெட் காப்பில் ஈடுபடப்போவதாகவும், ஆனால் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் வேறு எவரையும் விக்கெட் காப்பில் ஈடுபட அனுமதிக்கப் போவதான கருத்துக்களை டி கொக் வெளிப்படுத்தியுள்ளார்.
14 minute ago
21 minute ago
22 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
21 minute ago
22 minute ago
38 minute ago