2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

குழாமில் மாற்றமில்லை

Editorial   / 2018 டிசெம்பர் 19 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளுக்கான அவுஸ்திரேலியக் குழாமில் மாற்றமெதுவும் ஏற்படுத்தப்படவில்லை.

அந்தவகையில், இரண்டாவது போட்டிக்கு முன்பதாக ஆரம்பத்திலிருந்து அறிவிக்கப்பட்ட குழாமிலிருந்து வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் ட்ரிமெய்ன் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய குழாமில் மேலதிக வேகப்பந்துவீச்சாளராக பீற்றர் சிடிலும் மேலதிக துடுப்பாட்ட வீரராக மிற்செல் மார்ஷும் காணப்படுகின்றனர்.

இந்நிலையில், இத்தொடரின் பயிற்சிப் போட்டியில் கணுக்கால் காயத்துள்ளாகியிருந்த இந்திய அணியின் இளம் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பிறித்திவி ஷா, காயம் முழுமையாக குணமடையாமை காரணமாக குழாமிலிருந்து விலகியுள்ள நிலையில் அவர் மாயங்க் அகர்வாலால் பிரதியிடப்பட்டுள்ளதுடன், சகலதுறை வீரர் ஹர்டிக் பாண்டியாவும் இந்தியக் குழாமில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .