2025 ஜூலை 12, சனிக்கிழமை

குழாம்களில் சேர்க்கப்பட்டார் ராசா

Editorial   / 2018 செப்டெம்பர் 26 , பி.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கு, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்காகவும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காகவும் சுற்றுப் பயணம் செய்யவுள்ள சிம்பாப்வேக் குழாம்களில் சிகண்டர் ராசா சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த ஒப்பந்தங்களை மீறினாரென ஒப்பந்தத்தை இழந்திருந்த ராசா, ஒப்பந்த சபையைச் சந்தித்து ஒப்பந்த பிரச்சினைகளைத் தீர்த்து இவ்வாரம் புதிய ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடவுள்ள நிலையிலேயே குறித்த குழாம்களில் இடம்பெற்றுள்ளார்.

எவ்வாறெனினும், தென்னாபிரிக்காவுக்கெதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடர்களுக்கான குழாம்கள் நேற்று புறப்பட்டமை காரணமாக அக்குழாம்களில் ராசா இடம்பெறவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .