Editorial / 2023 மே 23 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை விமானப்படை ஈகிள் கோல்ப் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு SLT மொபிடல் நிறுவனத்தின் அனுராசராயுடன் இடம்பெற்ற குவாட்ரேங்கில் கோல்ப் தொடரில் பங்குபற்றி வேற்றியீட்டிய ஆண் மற்றும் பெண் போட்டியாளர்களுக்கான கிண்ணம்கள் மற்றும் சான்றுதல்கள் வழங்கும் நிகழ்வு விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களின் பங்கேற்பில் சீனக்குடா விமானப்படை தளத்தில் அமைந்துள்ள ஈகிள் கோல்ப் அமைப்பில் இடம்பெற்றது .
இந்த போட்டிகளோடு இணைந்து சீனக்குடா ஈகிள் கோல்ப் மைதானத்தில் " The Commanders' Island Green" எனும் பெயரில் புதிய கோல்ப் மைதான தொகுதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது
இந்த தொடரில் இலங்கையின் முன்னணி கோல்ப் கழகங்களான விமானப்படை ஈகிள் கோல்ப் கழகம் , றோயல் கொழும்பு கோல்ப் கழகம் , விக்டோரியா கோல்ப் கழகம் மற்றும் நுவரெலியா கோல்ப் கழகம் சார்பாக வீரவீராங்கனைகள் பங்குபற்றினர் இந்த தொடரில் 325 போனஸ் புள்ளிகளை பெற்று இலங்கை விமானப்படை ஈகிள் கோல்ப் கழகம் ஒட்டுமொத்த தொடரின் வெற்றியை தன்வசப்படுத்தியது
இந்த தொடரில் சிறந்த குறுந்தூர ஷாட் வெற்றியாளராக விமானப்படை ஈகிள் கோல்ட் கழகத்தின் எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களுக்கு வழங்கப்பட்டது , சிறந்த நெடுதூர ஷாட் வெற்றியாளராக நுவரெலியா கோல்ப் கழகத்தின் மைக்கேல் சத்தியசிவம் அவர்களுக்கு வழங்கப்பட்டது ,சிறந்த குறுந்தூர ஷாட் மகளிர் பிரிவில் கோப்பையை நுவரெலியா கோல்ஃப் கிளப்பின் பிரான் டி மெல் வென்றார் மற்றும் சிறந்த நெடுதூர ஷாட் வெற்றியாளராக ரோயல் கொழும்பு கோல்ஃப் கிளப்பின் டினுகா பொரலஸ்ஸ வென்றனர்.





24 Jan 2026
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Jan 2026
24 Jan 2026