2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கோலாகலமாக நிறைவடைந்த ஆசிய விளையாட்டு போட்டி

Freelancer   / 2023 ஒக்டோபர் 09 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

19-வது ஆசிய விளையாட்டு போட்டி கடந்த மாதம் 23 ஆம் திகதி சீனாவின் ஹாங்சோவ் நகரில் ஆரம்பமாகியது.

45 நாடுகளை சேர்ந்த 12,407 வீரர், வீராங்கனைகள் 40 வகையான போட்டிகளில் பங்கேற்றனர். 19-வது ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்க வேட்டையில் சீனாவின் கையே ஓங்கியது. தொடர்ந்து 11-வது ஆண்டாக சீனா பதக்கப்பட்டியலில் 'நம்பர் வன்' இடத்தை ஆக்கிரமித்துள்ளது.

கடைசி நாளான நேற்று (08) நீச்சலில் இசைக்கேற்ப நடனம் மற்றும் கராத்தே பந்தயங்கள் மட்டுமே இடம்பெற்றது.

இதைத் தொடர்ந்து இரவில் தாமரைப்பூ வடிவிலான ஹாங்சோவ் ஒலிம்பிக் மைதானத்தில் லேசர் ஒளி கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு விழா கோலாகலமாக அரங்கேறியது.

இறுதியாக 2026 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டை நடத்தும் ஜப்பானிடம், ஆசிய ஒலிம்பிக் சபையின் கொடியை ஆசிய ஒலிம்பிக் சபையின் இடைக்கால தலைவர் இந்தியாவின் ரனதீர் சிங் வழங்கியதுடன் போட்டி நிறைவுபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X