2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

சிக்கினார் யாசீர் ஷா

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 27 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் அணியின் நட்சத்திரச் சுழற்பந்துவீச்சாளர் யாசீர் ஷா, தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தைப் பயன்படுத்தியமைக்காக, இடைக்காலத் தடைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

ஊக்கமருந்துக்கெதிரான உலக முகவராண்மையால் தடைசெய்யப்பட்டுள்ள குளோர்டலிடோன் என்ற பதார்த்தம், அவரது உடலில் காணப்பட்டதையடுத்தே, இந்த இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைக்காலத் தடைக்கெதிராக பி மாதிரிப் பரிசோதனையை மேற்கொள்ள அவர் கோருவாராயின், அப்பரிசோதனை மேற்கொள்ளப்படும். அத்தோடு, இதுகுறித்து விளக்கமளிக்கவும் அவர் கோரமுடியும்.

குற்றவாளியாக இனங்காணப்படுவாராயின், அதிகபட்சமாக 4 ஆண்டுகாலத் தடை, அவருக்கு விதிக்கப்படும். இலங்கையின் குசால் பெரேராவுக்கும், இதே மாதிரியான நிலையே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .