Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 22 , பி.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில் இடம்பெற்றுவந்த சின்சினாட்டி பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிகளில், பெண்களுக்கான போட்டியில் அங்கெலிக் கேர்பர் எதிர்பாராத தோல்வியைச் சந்தித்தார்.
பெண்களுக்கான போட்டியில் உலகின் 17ஆவது நிலை வீராங்கனையாக இருந்த செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவும் 2ஆம் நிலை வீராங்கனையான அங்கெலிக் கேர்பரும் மோதினர். இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால், தரப்படுத்தலில் செரினா வில்லியம்ஸைப் பின்தள்ளி, முதலிடத்தைப் பிடிக்க முடியுமென்ற நிலையில் களமிறங்கிய கேர்பர், 3-6, 1-6 என்ற நேர் செட்களில் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, 6 இடங்கள் முன்னேறிய பிளிஸ்கோவா, 11ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.
11 minute ago
18 minute ago
19 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
18 minute ago
19 minute ago
35 minute ago