Shanmugan Murugavel / 2015 நவம்பர் 01 , மு.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறிமியர் லீக் தொடரில் மன்செஸ்டர் சிற்றி, ஆர்சனல், லிவர்பூல் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
இதில் மன்செஸ்டர் சிற்றி அணி 2-1 என்ற கோல் கணக்கில் நோர்விச் சிற்றி அணியைத் தோற்கடித்து முதலிடத்தில் நீடிக்கின்றது. இப்போட்டியில் நிக்கொலஸ் ஓட்டமென்டி 67 ஆவது நிமிடத்தில் ஒரு கோலினைப் பெற்று சிற்றி அணிக்கு முன்னிலை பெற்றுக்கொடுத்தார். தொடர்ந்து 83வது நிமிடத்தில் நோர்விச் சிற்றி அணியின் கமரூன் ஜெரோம் ஒரு கோலினைப் பெற்று கோல் எண்ணிக்கையை சமப்படுத்தினார். எனினும் 89ஆவது நிமிடத்தில் யாயா தோரே, கிடைத்த பெனால்டியை கோலாக்க சிற்றி வெற்றி பெற்றது.
அடுத்து ஆர்சனல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் சுவான்சீ அணியை தோற்கடித்திருந்தது. ஆர்சனல் அணி சார்பாக ஒலிவர் ஜிரோட், லோரண்ட் கொஷென்லி, ஜோயல் கம்பெல், முறையே 49, 68, 73 ஆவது நிமிடங்களில் கோல்களைப் பெற்றனர். இந்த வெற்றியுடன் ஆர்சனல் அணி புள்ளிகள் தரவரிசையில் சிற்றியுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளது.
இதேவேளை தொடர்ச்சியாக இறங்குமுகத்தை சந்தித்து வரும் செல்சி அணி, 3-1 என்ற கணக்கில் லிவர்பூல் அணியுடன் தோல்வியுற்று மேலும் அடிவாங்கியுள்ளது. இப்போட்டியில் 4ஆவது நிமிடத்தில் செல்சி அணியின் ரமாரிஸ்கோலினைப் பெற்றபோதும் லிவர்பூல் அணி சார்பாக பிலிப் கோத்தின்கோ 45, 74 ஆவது நிமிடத்தில் கோல்களினைப் பெற்று தனது அணியை முன்னிலைப்படுத்தினார். பின்னர் 83ஆவது நிமிடத்தில் பென்டீகி மேலுமொரு கோலினைப் பெற்று தனது அணியின் வெற்றியை உறுதிப்படுத்தியிருந்தார்.
தவிர மன்செஸ்டர் யுனைட்டெட், கிறிஸ்ட்டல் பலஸ் அணிகளிடையேயான போட்டியில் கோலெதுவும் பெறப்பட்டிருக்காத நிலையில் சமநிலையில் முடிவடைந்திருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .