Shanmugan Murugavel / 2015 நவம்பர் 02 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்பியன்ஸ் லீக் கீதம் இசைக்கப்படும் போது, மன்செஸ்டர் சிற்றி அணியின் இரசிகர்கள், 'கூ" அடித்தமை தொடர்பாக கால்பந்தாட்டச் சங்கங்களின் ஐரோப்பிய ஒன்றியத்தின் (கா.ச.ஐ.ஒ) விசாரணைகள், கேலியானவை என, மன்செஸ்டர் சிற்றியின் தலைவர் வின்சென்ற் கொம்பனி தெரிவித்துள்ளார்.
தொடரின் கீதத்துக்கான இடையூறு தொடர்பாக, மன்செஸ்டர் சிற்றி அணி மீது விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. இது தொடர்பிலேயே கொம்பனி தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
மன்செஸ்டர் சிற்றி அணியின் இரசிகர்களுக்கும் கால்பந்தாட்டச் சங்கங்களின் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையிலான முரண்பாடுகள் தொடர்ச்சியாகக் காணப்பட்ட நிலையிலேயே, இச்சம்பவம், கடந்த மாதம் இடம்பெற்றிருந்தது.
'அது கேலியானது. ஐரோப்பாவில் நாங்கள் பல போட்டிகளில் பங்குபற்றியுள்ளோம், அங்கு இனத்துவேச ஒலிகள் எழுப்பப்பட்டன. அவற்றை ஏற்றுக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. அத்தோடு, சில வேளைகளில், அவ்வாறான செயல்களைச் செய்த அணிகளைப் போலவே எங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .