Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 05 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் காலியில் இடம்பெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில், 413 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கோடு, தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலிய அணி, மூன்று விக்கெட்டுகளை இழந்து 25 ஓட்டங்களைப் பெற்று தடுமாறி வருகிறது.
தற்போது களத்தில், டேவிட் வோணர் 22, ஸ்டீவன் ஸ்மித் ஒரு ஓட்டத்துடன் காணப்படுகின்றனர். பந்துவீச்சில் டில்ருவான் பெரேரா இரண்டு, ரங்கன ஹேரத் ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.
முன்னதாக, தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 237 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக, டில்ருவான் பெரேரா 64, அணித்தலைவர் அஞ்செலோ மத்தியூஸ் 47, குஷால் பெரேரா 35, தனஞ்சய டி சில்வா 34 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மிற்செல் ஸ்டார்க் ஆறு, நேதன் லையன் இரண்டு, ஜோஸ் ஹெசில்வூட், ஜோன் ஹொலண்ட் தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றியிருந்தனர்.
முன்னதாக காலையில், தனது முதலாவது இனிங்ஸில் 106 ஓட்டங்களுடன் அவுஸ்திரேலிய அணி சுருண்டிருந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக டேவிட் வோணர் 42, மிற்செல் மார்ஷ் 27 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். பந்துவீச்சில், இலங்கையணி சார்பாக, டில்ருவான் பெரேரா, ரங்கன ஹேரத் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுகளையும் லக்ஷன் சந்தகன், விஷ்வ பெர்ணாண்டோ ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
முதல் நாளில், தமது முதலாவது இனிங்ஸில் இலங்கையணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 281 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. துடுப்பாட்டத்தில், குஷால் மென்டிஸ் 86, அஞ்செலோ மத்தியூஸ் 54, குஷால் பெரேரா 49, தனஞ்சய டி சில்வா 37 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் மிற்செல் ஸ்டார்க் ஐந்து, நேதன் லையன் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இப்போட்டியில், மிற்செல் ஸ்டார்க், 94 ஓட்டங்களுக்கு 11 விக்கெட்டுகளை கைப்பற்றியமையே அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஒருவர், இலங்கையில் வைத்துப் பெற்ற சிறந்த பெறுதி ஆகும்.
15 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
26 minute ago