Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 15 , பி.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான பங்கபந்து இ-20 கிண்ணத் தொடரில், போர்ச்சூன் பரிஷலுக்கெதிரான கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற வெளியேற்றப் போட்டியில் தனது சக பெக்ஸிம்கோ டாக்கா வீரர் நசும் அஹ்மட்டுடன் முறையற்ற விதத்தில் இரண்டு தடவை நடந்து கொண்டதற்காக பங்களாதேஷின் சிரேஷ்ட வீரர் முஷ்பிக்கூர் ரஹீம் மன்னிப்புக் கோரியுள்ளார்.
இந்நிலையில், பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் நடத்தைக் கோவையை மீறியதற்காக ரஹீமின் போட்டி ஊதியத்தில் 25 சதவீதம் தண்டம் ரஹீமுக்கு அறவிடப்பட்டதாக அறிக்கையொன்றில் கிரிக்கெட் சபை நேற்று முன்தினம் தெரிவித்துள்ளது.
அஹ்மட்டை நோக்கி அச்சுறுத்தும் சமிக்ஞையை ரஹீம் வெளிப்படுத்தியிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .