2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

சம்பியனானது நியூ சௌத் வேல்ஸ்

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவின் உள்ளூர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரின் சம்பியன்களாக, ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான நியூ சௌத் வேல்ஸ் அணி தெரிவாகியுள்ளது.

சிட்னியிலுள்ள வடக்கு சிட்னி ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூ சௌத் வேல்ஸ் அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்திருந்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தெற்கு அவுஸ்திரேலிய அணி, டொம் கூப்பரின் 105 (119), கலம் பேர்குசனின் 61 (87) ஆகியோரின் துணையோடு, 46.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றது. கூப்பர், பேர்குசன் தவிர, வேறு எவரும் 20 ஓட்டங்களைத் தானும் பெற்றிருக்கவில்லை.

பந்துவீச்சில், ஜொஷ் ஹேஸல்வூட், மிற்சல் ஸ்டார் இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும் ஷோன் அபொட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

222 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூ சௌத் வேல்ஸ் அணி, 29.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

எட் கொவான், ஸ்டீவன் ஸ்மித் இருவரும் ஆட்டமிழக்காமல் முறையே 88 (78), 84 (72) ஓட்டங்களைப் பெற்றனர்.
இப்போட்டியின் நாயகனாக ஜொஷ் ஹேஸல்வூடும், இத்தொடரின் நாயகனாக 6 போட்டிகளில் 26 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மிற்சல் ஸ்டார் தெரிவானார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .