2026 மே 13, புதன்கிழமை

சமநிலையில் டொட்டென்ஹாம் – லீட்ஸ் போட்டி

Shanmugan Murugavel   / 2026 மே 12 , பி.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், தமது மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்ற லீட்ஸ் யுனைட்டெட்டுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சமப்படுத்தியது.

டொட்டென்ஹாம் சார்பாகப் பெறப்பட்ட கோலை மத்தியிஸ் டெல் பெற்றதோடு, லீட்ஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை டொமினிக் கல்வேர்ட்-லூவின் பெற்றிருந்தார்.

பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 79 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் ஆர்சனல் காணப்படுகின்றது. 74 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் மன்செஸ்டர் சிற்றியும் 65 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட்டும் காணப்படுகின்றன. நடப்புச் சம்பியன்களான லிவர்பூலும் அஸ்தன் வில்லாவும் தலா 59 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் கோலெண்ணிக்கை அடிப்படையில் நான்காம், ஐந்தாமிடங்களில் காணப்படுகின்றன. இதில் ஏனைய அணிகளை விட சிற்றி ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .