Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 18 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், லெவன்டேயின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், அத்லெட்டிகோ மட்ரிட்டுக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
அத்லெட்டிகோ சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்கோஸ் லொரன்டே பெற்றதோடு, லெவன்டே சார்பாகப் பெறப்பட்ட கோலை எனிஸ் பார்ட்ஹி பெற்றார்.
அந்தவகையில், லா லிகா புள்ளிகள் பட்டியலில் 55 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் அத்லெட்டிகோ உள்ளது. 49 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நடப்புச் சம்பியன்கள் றியல் மட்ரிட்டும், 46 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் பார்சிலோனாவும், 45 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் செவில்லாவும் காணப்படுகின்றன.
2 minute ago
13 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
13 minute ago
1 hours ago
2 hours ago