2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சமநிலையில் டொட்டமுண்ட் – லெய்ப்ஸிக் போட்டி

Editorial   / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெலிஸ்கா தொடரில், தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற ஆர்.பி லெய்ப்ஸிக்குடனான போட்டியை சமநிலையில் பொரூசியா டொட்டமுண்ட் முடித்துக் கொண்டது.

இப்போட்டியின் 23ஆவது நிமிடத்தில் தமது மத்தியகளவீரர் ஜூலியான் வைகல் பெற்ற கோலின் மூலம் பொரூசியா டொட்டமுண்ட் முன்னிலை பெற்றிருந்தது. தொடர்ந்து போட்டியின் 34ஆவது நிமிடத்தில் தமது இன்னொரு மத்தியகளவீரர் ஜூலியான் பிரான்ட் பெற்ற கோலுடன் தமது முன்னிலையை பொரூசியா டொட்டமுண்ட் இரட்டிப்பாக்கி, முதற்பாதி முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை காணப்பட்டது.

இந்நிலையில், இரண்டாவது பாதியின் இரண்டாவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்ற ஆர்.பி லெய்ப்ஸிக்கின் முன்களவீரர் திமோ வேர்னர் முன்னிலையை ஒன்றாகக் குறைத்ததுடன், அடுத்த ஆறாவது நிமிடத்தில் மேலுமொரு கோலைப் பெற்று கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

எனினும், அடுத்த இரண்டாவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்ற பொரூசியா டொட்டமுண்டின் முன்களவீரர் ஜடோன் சஞ்சோ, தனதணிக்கு மீண்டும் முன்னிலையை வழங்கினார்.

எவ்வாறெனினும், போட்டியின் 77ஆவது நிமிடத்தில், மாற்றுவீரராகக் களமிறங்கிய ஆர்.பி லெய்ப்ஸிக்கின் முனகளவீரர் பற்றிக் ஷிச் பெற்ற கோலோடு போட்டி இறுதியில் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .