Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2020 ஒக்டோபர் 08 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிநேகபூர்வ சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளில், போர்த்துக்கல்லில் நேற்று நடைபெற்ற போர்த்துக்கல், ஸ்பெய்னுக்கிடையேயான போட்டி 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
இதேவேளை, ஜேர்மனியில் நடைபெற்ற ஜேர்மனி, துருக்கிக்கிடையேயான போட்டியானது 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. ஜேர்மனி சார்பாக, ஜூலியன் ட்ரெக்ஸ்லர், புளோரியன் நியூஹெளஸ், ஜியாந்லூகா வோல்ட்ஸ்ஷிமிட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். துருக்கி சார்பாக, ஒஸன் துஃபான், எஃபக்க கராகா, கெனன் கரமன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில், நெதர்லாந்தில் நடைபெற்ற நெதர்லாந்து, மெக்ஸிக்கோவுக்கிடையேயான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து தோல்வியடைந்தது. மெக்ஸிக்கோ சார்பாகப் பெறப்பட்ட கோலை றாவுல் ஜிமென்ஸ் பெற்றிருந்தார்.
இதேவேளை, சுவிற்ஸர்லாந்தில் நடைபெற்ற சுவிற்ஸர்லாந்து, குரோஷியாவுக்கிடையேயான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா வென்றது. குரோஷியா சார்பாக, ஜோசிப் பிரெகலோ, மரியோ பஸ்காலிச் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். சுவிற்ஸர்லாந்து சார்பாகப் பெறப்பட்ட கோலை மரியோ கவரனோவிச் பெற்றார்.
இந்நிலையில், பிரான்ஸில் நடைபெற்ற பிரான்ஸ், உக்ரேனுக்கிடையிலான போட்டியில் 7-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வென்றது. பிரான்ஸ் சார்பாகம், ஒலிவியர் ஜிரூட் இரண்டு கோல்களையும், எடுவார்டோ கமவிங்கா, கொரென்டின் டொலிஸோ, கிலியான் மப்பே, அன்டோனி கிறீஸ்மன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றதோடு, ஓவ்ண் கோல் முறையில் ஒரு கோல் கிடைக்கப் பெற்றிருந்தது. உக்ரேன் சார்பாகப் பெறப்பட்ட கோலை விக்டர் சைகனொவ் பெற்றிருந்தார்.
இதேவேளை, போலந்தில் நடைபெற்ற போலந்து, பின்லாந்துக்கெதிரான போட்டியில் 5-1 என்ற கோல் கணக்கில் போலந்து வென்றது. போலந்து சார்பாக, கமில் குறோசிக்கி மூன்று கோல்களையும், கிர்ஸ்டோஃப் பியடெக், அர்கடியுஸ் மிலிச் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். பின்லாந்து சார்பாகப் பெறப்பட்ட கோலை இல்மரி நிஸ்கனென் பெற்றிருந்தார்.
இந்நிலையில், இத்தாலியில் நடைபெற்ற இத்தாலி, மோல்டோவாவுக்கிடையேயான போட்டியில் 6-0 என்ற கோல் கணக்கில் இத்தாலி வென்றது. இத்தாலி சார்பாக, ஸ்டீபன் எல் ஷராவி இரண்டு கோல்களையும், பிறயான் கிறிஸ்டன்டே, பிரான்ஸெஸ்கோ கபுட்டோ, டொமெனிக்கோ பெரார்டி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றதோடு, ஓவ்ண் கோல் முறையில் ஒரு கோல் கிடைக்கப்பெற்றிருந்தது.
இதேவேளை, டென்மார்க்கில் நடைபெற்ற டென்மார்க், பரோயி தீவுகளுக்கிடையிலான போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க் வென்றது. டென்மார்க் சார்ப்பாக, அன்ட்ரியாஸ் ஸ்கொவ் ஒல்ஸென், கிறிஸ்டியன் எரிக்சன், ஜோகிம் மயேஹ்லே, அன்ட்ரேயாஸ் கொர்னெலியுஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago