2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சமநிலையில் முடிவடைந்த எல் கிளாசிகோ

Editorial   / 2019 டிசெம்பர் 19 , பி.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், நடப்புச் சம்பியன்களான பார்சிலோனாவின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், அவ்வணியின் பரமவைரியான றியல் மட்ரிட்டுடனான போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது.

இப்போட்டியானது எவ்விதக் கோல்களும் பெறப்படாமல் 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்த நிலையில், றியல் மட்ரிடடின் முன்களவீரர் கரெத் பேலின் நிராகரிக்கப்பட்ட கோலே இரண்டு அணிகளிலும் கோல் பெற அருகில் வந்த சந்தர்ப்பமாகக் காணப்பட்டிருந்தது.

இக்கோல் பெறப்படுவதற்கு முன்பாக, றியல் மட்ரிட்டின் பின்களவீரர் பெர்லான்ட் மென்டி ஓஃப் சைட்டில் இருந்ததாகக் கணிக்கப்பட்டிருந்தார்.

இப்போட்டியின்போது சக முன்களவீரர் அன்டோனி கிறீஸ்மன்னால் வழங்கப்பட்ட அரிய கோல்பெறும் வாய்ப்பொன்றை பார்சிலோனாவின் அணித்தலைவரும், நட்சத்திர முன்களவீரருமான லியனல் மெஸ்ஸி தவறவிட்டிருந்தார். மறுபக்கமாக, றியல் மட்ரிட்டின் முன்களவீரரான கரிம் பென்ஸீமாவும் முதற்பாதியில் கோல் பெறும் வாய்ப்பைத் தவறவிட்டிருந்தார்.

இதுதவிர, றியல் மட்ரிட்டின் மத்தியகள வீரர் கஸேமீரோவால் கோல் கம்பத்தை நோக்கி தலையால் முட்டிய பந்தை பார்சிலோனாவின் பின்களவீரர் ஜெரார்ட் பிகே தடுத்திருந்ததுடன், றியல் மட்ரிட்டின் இன்னொரு மத்தியகளவீரரான பெடரிக்கோ வல்வேர்டேயின் உதையை பார்சிலோனாவின் கோல் காப்பாளர் மார்க்-அன்ட்ரே டியர் ஸ்டீகன் தடுத்திருந்தார்.

அந்தவகையில், இப்போட்டிகளின் முடிவில் லா லிகா புள்ளிகள் தரவரிசையில் இரண்டு அணிகளும் தலா 36 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும், கோலெண்ணிக்கை வித்தியாசத்தின் அடிப்படையில் முதலாமிடத்தில் பார்சிலோனாவும், இரண்டாமிடத்தில் றியல் மட்ரிட்டும் காணப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .