Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 19 , பி.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற றியல் மட்ரிட், அத்லெட்டிகோ மட்ரிட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையிலேயே குறித்த போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இப்போட்டியில் இரண்டு அணிகளின் பின்கள வீரர்களும் சிறப்பாகச் செயற்பட்டிருந்த நிலையில், போட்டியின் மூன்றாவது நிமிடத்தில் கிடைத்த கோல் பெறும் வாய்ப்பை அத்லெட்டிகோ மட்ரிட்டின் ஏஞ்சல் கொரேரா வீணாக்கியிருந்தார். றியல் மட்ரிட்டின் கோல் எல்லைப் பகுதியில் எதுவித அழுத்தமுமில்லாமலிருந்த ஏஞ்சல் கொரேரா, தனது உதையை கோல் கம்பத்துக்கு வெளியே செலுத்தியிருந்தார்.
இதேவேளை, அத்லெட்டி மட்ரிட்டின் கெவின் கமெய்ரோவின் உதையை, றியல் மட்ரிட்டின் பின்கள வீரர் ரபேல் வரானே தடுத்திருந்ததுடன், றியல் மட்ரிட்டின் மத்தியகள வீரர் டொனி குரூஸின் உதையை, அத்லெட்டிகோ மட்ரிட்டின் கோல் காப்பாளர் ஜான் ஒப்பிளக் தடுத்திருந்தார்.
இந்நிலையில், இப்பருவகால லா லிகாவில் தடுமாறிவரும் றியல் மட்ரிட்டின் முன்கள வீரர்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ, கரிம் பென்ஸீமா மற்றும் அத்லெட்டிகோ மட்ரிட்டின் அந்தோனி கிறீஸ்மன் ஆகியோர் இப்போட்டியிலும் பிரகாசிக்கவில்லை.
இதேவேளை, நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில், 3-0 என்ற கோல் கணக்கில் லெகனிஸை பார்சிலோனா வென்றிருந்தது. பார்சிலோனா சார்பாக லூயிஸ் சுவாரஸ் இரண்டு கோல்களையும் போலின்ஹோ ஒரு கோலையும் பெற்றனர்.
அந்தவகையில், லா லிகா புள்ளிகள் தரவரிசையில் 34 புள்ளிகளுடன் முதலிடத்தில் பார்சிலோனா காணப்படுகின்றது. பார்சிலோனாவை விட 10 புள்ளிகள் குறைவாக, 24 புள்ளிகளைப் பெற்றுள்ள றியல் மட்ரிட்டும் அத்லெட்டிகோ மட்ரிட்டும் முறையே மூன்றாம், நான்காமிடங்களில் காணப்படுகின்றன.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago