Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 31 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், எல்ஷேயின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட்டுக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
றியல் மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட கோலை லூகா மோட்ரிட்ச் பெற்றதோடு, எல்ஷே சார்பாகப் பெறப்பட்ட கோலை பிடெல் சாவேஸ் பெற்றிருந்தார்.
இந்நிலையில், கிரெனடாவின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் வலென்சியா தோல்வியடைந்தது. வலென்சியா சார்பாகப் பெறப்பட்ட கோலை கெவின் கமெய்ரோ பெற்றதோடு, கிரெனடா சார்பாக கெனடி, ஜோர்ஜ் மொலினா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
18 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
26 minute ago