2025 ஜூலை 02, புதன்கிழமை

சமநிலையில் லிவர்பூல் – எவெர்ற்றன் போட்டி

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 18 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், எவெர்ற்றனின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற நடப்புச் சம்பியன்கள் லிவர்பூலுக்கும், எவெர்ற்றனுக்குமிடையிலான போட்டியானது 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது.

லிவர்பூல் சார்பாக, சாடியோ மனே, மொஹமட் சாலா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். எவெர்ற்றன் சார்பாக, மைக்கல் கீன், டொமினிக் கல்வேர்ட்-லூயின் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, மன்செஸ்டர் சிற்றியின் மைதானத்தில் நடைபெற்ற மன்செஸ்டர் சிற்றிக்கும் ஆர்சனலுக்குமிடையிலான போட்டியில் ரஹீம் ஸ்டேர்லிங்க் பெற்ற கோலுடன் 1-0 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி வென்றது.

இந்நிலையில், செல்சியின் மைதானத்தில் நடைபெற்ற செல்சிக்கும், செளதாம்டனுக்குமிடையிலான போட்டியானது 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது. செல்சி சார்பாக, திமோ வேர்னர் இரண்டு கோல்களையும், கை ஹவேர்ட்ஸ் ஒரு கோலையும் பெற்றனர். செளதாம்டன் சார்பாக, டனி இங்ஸ், சே அடம்ஸ், ஜனிக் வெஸ்டெர்கார்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, நியூகாசில் யுனைட்டெட்டின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற நியூகாசில் யுனைட்டெட், மன்செஸ்டர் யுனைட்டெட்டுக்கிடையிலான போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றிருந்தது. மன்செஸ்டர் யுனைட்டெட் சார்பாக, ஹரி மக்குவாயா, புரூனோ பெர்ணான்டஸ், ஆரோன் வான்-பிஸாகா, மார்க்கஸ் றஷ்ஃபோர்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். நியூகாசில் யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோல் ஓவ்ண் கோல் முறையில் கிடைக்கப்பெற்றிருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .