Shanmugan Murugavel / 2026 மார்ச் 12 , பி.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

சம்பியன்ஸ் லீக்கில், ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயெர் லெவர்குசனின் மைதானத்தில் புதன்கிழமை (11) நடைபெற்ற அவ்வணிக்கும் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான ஆர்சனலுக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
ஆர்சனல் சார்பாகப் பெறப்பட்ட கோலை கை ஹவேர்ட்ஸ் பெற்றதோடு, லெவர்குசன் சார்பாகப் பெறப்பட்ட கோலை றொபேர்ட் அன்ட்றிச் பெற்றிருந்தார்.
இதேவேளை தமது மைதானத்தில் வியாழக்கிழமை (12) நடைபெற்ற இன்னொரு பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றியுடனான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் வென்றது. மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட மூன்று கோல்களையும் பெடெரிக்கோ வல்வர்டே பெற்றிருந்தார்.
இந்நிலையில் தமது மைதானத்தில் நடைபெற்ற பிறிதொரு பிறீமியர் லீக் கழகமான செல்சியுடனான போட்டியில் 5-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago