2026 பெப்ரவரி 01, ஞாயிற்றுக்கிழமை

சம்பியன்ஸ் லீக்: வெளியேற்றப்பட்டது நாப்போலி

Shanmugan Murugavel   / 2026 ஜனவரி 29 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பியன்ஸ் லீக்கிலிருந்து இத்தாலிய சீரி ஏ கழகமான நாப்போலி வெளியேற்றப்பட்டுள்ளது.

தமது மைதானத்தில் இன்று நடைபெற்ற இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சியுடனான போட்டியில் 2-3 என்ற கோல் கணக்கில் தோற்றே சம்பியன்ஸ் லீக்கிலிருந்து நாப்போலி வெளியேறியது.

நாப்போலி சார்பாக அந்தோனியோ வெர்கரா, றஸ்முஸ் ஹொஜ்லுன்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். செல்சி சார்பாக ஜோவா பெட்ரோ இரண்டு கோல்களைப் பெற்றதோடு, என்ஸோ பெர்ணாண்டஸ் ஒரு கோலைப் பெற்றிருந்தார்.

இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற நோர்விஜியக் கழகமான பொடோ/ஜிலிம்டுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட் தோல்வியடைந்திருந்தது. அத்லெட்டிகோ சார்பாகப் பெறப்பட்ட கோலை அலெக்ஸான்டர் சொர்லொத் பெற்றதோடு, ஜிலிம்ட் சார்பாக பிறெட்றிக் ஸ்ஜோவொல்ட், கஸ்பர் ஹோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில் போர்த்துக்கல் கழகமான பெய்பிக்காவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-4 என்ற கோல் கணக்கில் இன்னொரு ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் தோல்வியடைந்தது. மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் கிலியான் மப்பே பெற்றார். பெய்பிக்கா சார்பாக அன்ட்றயாஸ் ஸ்ஜெல்டெருப், வன்கெலிச் பவ்லிடிஸ், அனடோலி டேர்பின் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற இன்னொரு இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலனுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்ட் தோல்வியடைந்தது. இன்டர் சார்பாக பெடெரிக்கோ டிமார்கோ, அன்டி டியோஃப் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில் தமது மைதானத்தில் நடைபெற்ற பிறிதொரு சீரி ஏ கழகமான ஜுவென்டஸுடனான போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் மொனாக்கோ சமப்படுத்தியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X