2025 மே 17, சனிக்கிழமை

சம்பியனான மும்பை நியூ யோர்க்

Freelancer   / 2023 ஜூலை 31 , பி.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் நியூ யோர்க் சம்பியனானது.

டலாஸில் நேற்றுக் காலை நடைபெற்ற சியட்டில் ஒர்காஸுடனான இறுதிப் போட்டியில் வென்றே நியூ யோர்க் சம்பியனானது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஒர்காஸ், குயின்டன் டி கொக்கின் 87 (52), ஷுபம் ரஞ்சனேயின் 29 (16), டுவைன் பிறிட்டொறியஸின் 21 (07) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், ரஷீட் கான் 4-0-9-3, ட்ரெண்ட் போல்ட் 4-0-34-3, ஸ்டீவன் டெய்லர் 4-0-25-1 என்ற பெறுதியைக் கொண்டிருந்தனர்.

பதிலுக்கு 184 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூ யோர்க், பதிலணித்தலைவர் நிக்கலஸ் பூரானின் ஆட்டமிழக்காத 137 (55) ஓட்டங்களோடு 16 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில், இமாட் வஸீம் 2-0-14-1 என்ற பெறுதியைக் கொண்டிருந்தார்.

இப்போட்டியின் நாயகனாகவும், தொடரின் நாயகனாகவும் பூரான் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .