2025 ஜூலை 03, வியாழக்கிழமை

சம்பியனானது லிவர்பூல்

Editorial   / 2019 டிசெம்பர் 23 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் கழக உலகக் கிண்ணத் தொடரில், மேலதிக நேரத்தில் தமது முன்களவீரர் றொபேர்ட்டோ பெர்மினோவின் கோல் கைகொடுக்க, பிரேஸில் கழகமான பிளமெங்கோவை வென்று இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் சம்பியனாகியது.

கட்டாரில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஒன்பதாவது மேலதிக நிமிடத்தில் றொபேர்ட்டோ பெர்மினோ பெற்ற கோலின் மூலம் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று லிவர்பூல் சம்பியனாகியிருந்தது.

இதற்கு முன்பதாக இரண்டு அணிகளிலும் கோல் பெறுவதை நெருங்கி வந்ததாக, போட்டியின் இரண்டாவது பாதியின் இரண்டாவது நிமிடத்தில் றொபேர்ட்டோ பெர்மினோவின் கோல் கம்பத்தை நோக்கிய உதையானது கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியிருந்தது.

இதேவேளை, போட்டியின் வழமையான நேரத்தின் இறுதி நிமிடங்களில் லிவர்பூலுக்கு பெனால்டியொன்று வழங்கப்பட்டிருந்தபோதும், பின்னர் காணொளி உதவி மத்தியஸ்தர் அமைப்பு மீளாய்வுக்குப் பின்னர் அப்பெனால்டி மீளப் பெறப்பட்டிருந்தது.

இப்போட்டியின் ஆரம்பத்திலும் கோல் பெறும் வாய்ப்பொன்றை றொபேர்ட்டோ பெர்மினோ கொண்டிருந்தபோதும் அவர் கோல் கம்பத்துக்கு மேலே பந்தைச் செலுத்தியிருந்தார்.

இதேவேளை, சக முன்களவீரர் மொஹமட் சாலா கோல் பெறுவதற்கான வாய்ப்பொன்றை லிவர்பூலின் மத்தியகளவீரர் நபி கெய்ட்டாவுக்கு வழங்கியிருந்தபோதும், அவர் அதைக் இலக்கிலிருந்து வெளியால் செலுத்தியிருந்தார்.

இதுதவிர, லிவர்பூலின் பின்களவீரர் நீண்ட தூரத்திலிருந்து உதைந்த உதையானது கோல் கம்பத்துக்கு சற்று வெளியே சென்றிருந்தது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .