Shanmugan Murugavel / 2020 ஒக்டோபர் 12 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க தேசிய கூடைப்பந்தாட்டச் சங்க இறுதிப் போட்டிகளில் லொஸ் ஏஞ்சலஸ் லேக்கர்ஸ் சம்பியனாகியது.
ஏழு போட்டிகள் கொண்ட இந்த இறுதிப் போட்டிகளில், 3-2 என முன்னிலை வகித்த மேற்கு மாநாட்டுச் சம்பியனான லொஸ் ஏஞ்சலஸ் லேக்கர்ஸ், ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடாவில் இன்று அதிகாலை நடைபெற்ற ஆறாவது போட்டியில் 106-93 என்ற புள்ளிகள் கணக்கில் கிழக்கு மாநாட்டுச் சம்பியனான மியாமி ஹீட்டை வென்றதன் மூலமே 4-2 என்ற இறுதிப் போட்டிகள் வெற்றி மூலம் பத்தாண்டுகளுக்குப் பின்னர் முதற்தடவையாக சம்பியனானது.
இப்போட்டியில் லொஸ் ஏஞ்சலஸ் லேக்கர்ஸின் லீப்ரோன் ஜேம்ஸ் 28 புள்ளிகளையும், அந்தோனி டேவிஸ் மற்றும் றஜோன் றொன்டோ ஆகியோர் தலா 19 புள்ளிகளைப் பெற்றனர்.
அந்தவகையில், இந்த இறுதிப் போட்டிகளின் மிகவும் பெறுமதிவாய்ந்த வீரராக லீப்ரோன் ஜேம்ஸ் தெரிவானார்.
இதேவேளை, 17ஆவது தடவையாக இந்த இறுதிப் போட்டிகளில் சம்பியனாகியுள்ள லொஸ் ஏஞ்சலஸ் லேக்கர்ஸ், அதிக தடவைகள் இறுதிப் போட்டிகளில் சம்பியனானதில் முதலாமிடத்திலுள்ள பொஸ்டன் செல்டிக்ஸை சமப்படுத்தியுள்ளது.
இப்பருவகாலத்துக்கு முன்னர் ஆறாண்டுகளாக தகுதிகாண் போட்டிகளுக்கு லொஸ் ஏஞ்சலஸ் லேக்கர்ஸ் தகுதிபெறத் தவறியிருந்தது.
1 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago
8 hours ago