2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சம்பியனானார் மரே

Editorial   / 2019 ஒக்டோபர் 21 , பி.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெல்ஜியத்தின் அன்ட்வேர்ப்பில் நடைபெற்ற ஐரோப்பிய பகிரங்க டென்னிஸ் தொடரில் உலகின் முன்னாள் முதல்நிலைவீரரான அன்டி மரே சம்பியனாகியுள்ளார்.

நேற்றிரவு நடைபெற்ற தனது இறுதிப் போட்டியில் சுவிற்ஸர்லாந்தின் ஸ்டான் வவ்றிங்காவை வென்றே மூன்று தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற அன்டி மரே சம்பியனாகியிருந்தார்.

இப்போட்டியின் முதலாவது செட்டை 3-6 என இழந்திருந்ததுடன், இரண்டாவது செட்டில் 1-3 என பின்தங்கியிருந்தபோதும், இரண்டாவது செட்டை 6-4 எனவும், தீர்க்கமான மூன்றாவது செட்டை 6-4 எனக் கைப்பற்றியதன் மூலமே பிரித்தானியாவின் அன்டி மரே சம்பியனாகியிருந்தார்.

தனது அரையிறுதிப் போட்டியில் 3-6, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் உகோ ஹம்பேர்ட்டை அன்டி மரேயும், 6-3, 6-2 என்ற நேர் செட்களில் தனது அரையிறுதிப் போட்டியில் இத்தாலியின் ஜனிக் சினரை ஸ்டான் வவ்றிங்காவும் வென்றே இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .