Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2021 செப்டெம்பர் 13 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூயோர்க்கில் இடம்பெற்ற அமெரிக்க ஓபன் டெனிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகின் 2ஆம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான சேர்பியாவின் நொவெக் ஜொக்கோவிச்சை 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார் 25 வயதான மெத்வதேவ்.
ரஷ்ய வீரர் மெத்வதேவுக்கு இதுவே முதல் கிராண்ஸ்ட்லாம் பட்டம் என்பதுடன், இந்த வருடம் இடம்பெற்ற அவுஸ்திரேலிய ஓபனில் இறுதிப் போட்டியில் ஜொக்கோவிச்சுடன் மோதி மெத்வதேவ் அதில் தோல்வி அடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2021ம் ஆண்டில் இதுவரை 27 போட்டித் தொடர்களில் ஜோக்கோவிச் விளையாடி வென்றுள்ளார். இதில் 4 கிராண்ட்ஸ்லாம்களும் அடங்கும்.
இந்த வருடம் பெப்ரவரி மாதம் இடம்பெற்ற அவுஸ்திரேலியன் ஓபன், ஜூன் மாதம் நடந்த பிரெஞ்ச் ஓபன், ஜூலை மாதம் நடந்த விம்பிள்டன் ஆகியவற்றில் ஜொக்கோவிச் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.
அமெரிக்க ஓபனிலும் பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையிலேயே ஜொக்கோவிச் தோல்வி அடைந்துள்ளார்.
இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று நடால், பெடரர் ஆகியோரின் சாதனையை ஜொக்கோவிச் சமன் செய்திருந்தார். அமெரிக்க ஓபன் பட்டத்தை அவர் வென்றிருந்தால் 4ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக இருந்திருக்கும் எனினும் அதைத் தவறவிட்டுள்ளார்.
இதுவரை ஒரே ஆண்டில் 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கடந்த 1933ஆம் ஆண்டில் ஜேக் கிராபோர்ட், 1956ஆம் ஆண்டில் லீ ஹோட் ஆகியோர் வென்றுள்ளனர் அவர்களுடன் ஜொக்கோவிச் இணைந்திருந்தார்.
இந்த ஆண்டில் 4 கிராண்ட்ஸ்லாம்களையும் வென்று 52 ஆண்டுகளுக்குப்பின் சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜொக்கோவிச் அதைத் தவறவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 May 2025
20 May 2025
20 May 2025