Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 27 , மு.ப. 08:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலிருந்து இங்கிலாந்து வெளியேற்றப்பட்டுள்ளது.
குழு பியில் அவுஸ்திரேலியாவும், தென்னாபிரிக்காவும் ஏற்கெனவே ஓவ்வொரு வெற்றி மற்றும் போட்டி கைவிடப்பட்ட நிலையில் தலா 3 புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில், லாகூரில் புதன்கிழமை (26) நடைபெற்ற ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் தோல்வியடைந்தமையைத் தொடர்ந்தே தொடரிலிருந்து இங்கிலாந்து வெளியேற்றப்பட்டுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், இப்ராஹிம் ஸட்ரானின் 177 (146), அஸ்மதுல்லாஹ் ஓமர்ஸாயின் 41 (31), மொஹமட் நபியின் 40 (24), அணித்தலைவர் ஹஷ்மதுல்லாஹ் ஷகிடியின் 40 (67) ஓட்டங்களோடு 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 325 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் ஜொஃப்ரா ஆர்ச்சர் 3, லியம் லிவிங்ஸ்டோன் 2, அடில் ரஷீட் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு 326 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து சார்பாக ஜோ றூட் 120 (111) ஓட்டங்களைப் பெற்றபோதும் ஓமர்ஸாய் (5), மொஹமட் நபி (2) , ரஷீட் கான், குல்படின் நைப், பஸல்ஹக் பரூக்கியிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 49.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 317 ஓட்டங்களையே பெற்று எட்டு ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக ஸட்ரான் தெரிவானார்.
36 minute ago
38 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
38 minute ago
1 hours ago