2025 ஜூலை 03, வியாழக்கிழமை

சம்ப்டோரியாவை வென்றது நாப்போலி

Editorial   / 2020 பெப்ரவரி 05 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், சம்ப்டோரியாவின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் நாப்போலி வென்றது.

இப்போட்டியின் மூன்றாவது நிமிடத்தில் தமது முன்களவீரர் அர்கடியுஸ் மிலிச் பெற்ற கோலுடன் ஆரம்பத்திலேயே நாப்போலி முன்னிலை பெற்றது.

தொடர்ந்து அடுத்த 13ஆவது நிமிடத்தில் தமது மத்தியகளவீரர் எலிஃப் எல்மாஸ் பெற்ற கோலுடன் தமது முன்னிலையை நாப்போலி இரட்டிப்பாக்கிக் கொண்டது.

இந்நிலையில், இதற்கடுத்த 13ஆவது நிமிடத்தில் சம்ப்டோரியாவின் முன்களவீரர் பபியோ கொய்யரெல்லா பெற்ற கோலின் மூலம் நாப்போலின் முன்னிலையை ஒரு கோலாக சம்ப்டோரியா குறைத்தது.

இதேவேளை, போட்டியின் 73ஆவது நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற பெனால்டியொன்றின் மூலம் கோலைப் பெற்ற சம்ப்டோரியாவின் முன்களவீரர் மனோலோ கப்பியடினி கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

இந்நிலையில், அடுத்த 10ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்ற மாற்றுவீரராகக் களமிறங்கிய நாப்போலியின் மத்தியகளவீரர் டியகோ டெம்மே, நாப்போலிக்கு முன்னிலையை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து போட்டியின் இறுதி நிமிடத்தில், மாற்றுவீரராகக் களமிறங்கிய நாப்போலியின் முன்களவீரர் ட்ரைஸ் மேர்ட்டன்ஸ் பெற்ற கோலுடன் இறுதியில் 4-2 என்ற கோல் கணக்கில் நாப்போலி வென்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .